—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
கோயில் அமைப்பு:
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூவர் கோயிலானது, தெற்கு வடக்காக மேற்கு நோக்கிய நிலையில் இரண்டு கோயில்கள் முழுமையானதாகவும் மற்ற ஒரு கோயில் அடித்தளத்தை மட்டும் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
மூவர் கோயிலின் மூன்று கோயில்களுக்கும் பொதுவான மகா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடமும் மற்றும் பிரகார சுற்றில் 16 பரிவார தெய்வங்களுக்கான சன்னிதியின் அஸ்திவாரங்கள் மட்டுமே உள்ளன. மேற்கே ஒரு கோபுரமும் இருந்த அடையாளம் காணப்படுகிறது.
இது அதிட்டானம் முதல் கலசம் வரை கல்லாலான கல் கோயிலாகும். இக்கோயில் சதுரவடிவ இரு தள விமான அமைப்பு உடையதாக உள்ளது. முழுமையாக உள்ள ஒரு கோயிலின் கருவறை உள்ளே மட்டும் ஆவுடையார் இல்லாத லிங்க வடிவில் மூலவர் உள்ளார். விமானத்தின் உள் பகுதியானது உள் கூடாகக் காணப்படுகிறது.
சிற்பங்கள்:
இந்த இரண்டு கோயில்களின் கோட்டங்களிலும் மற்றும் விமானத்திலும் காலசம்ஹாரமூர்த்தி , கங்காதரர்,அந்தகாசுர வதை மூர்த்தி, உமா சகிதர் , கஜசம்ஹாரர் , அர்த்தநாரீஸ்வரர், போன்ற சிற்பங்கள் உள்ளன. கண்ட பகுதியின் நான்கு மூலைகளிலும் நந்தி காணப்படுகிறது. துவார பாலகர்களும் மகரத் தோரணமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிட்டானத்தின் சிறப்பு:
இருபதாம் நூற்றாண்டில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் போது கட்டுமான கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது சில இடங்களில் பொருத்தமில்லாததாகக் காணப்படுகிறது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment