--- சேசாத்திரி சிறீதரன்
சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு
Impression of a Banawali seal from c.2300 – 1700 BCE, showing an acrobat leaping over a bull. Source: UMESAO 2000:88, No. 335
வேல் - மா, I -ன, மாடு - ன். இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.
மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன், hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே, U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள் நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.
எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன் என்பன.
___________________________________________________________
சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
No comments:
Post a Comment