Tuesday, December 31, 2013

புத்தாண்டு பிறக்குது !

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு ஓடுது, ஆயினும்
தடம் இன்னும் இருக்குது !
வித்தைகள் சிறக்கணும் !
வேலைகள் பெருகணும் !
வீணர்கள் தேறணும் !
சித்தர்கள் பிறக்கணும் !
பித்தர்கள் தெளியணும் !
யுக்திகள் கூர்மை ஆகணும் !
சண்டைகள் குறையணும் !
சாதிகள் சேர்ந்து வாழணும் ! ​
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
பொ ரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !
திறமைகள் ஒன்றாய் வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
மின்சக்தி பெருகி யந்திரம் ஓடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊறணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,  
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !  

1 comment:

  1. ஆம். தடம் இன்னும் இருக்குது. அருமையான கவிதை. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கட்டும். 2014 புத்தாண்டு வாழ்த்துக்கள், டா. சி.ஜெயபாரதன்.

    ReplyDelete