தமிழ்த்தாய் வாழ்த்து
கற்றறி புலவருள் மகிழா களியா
நிச்சலு முறைதரு கனியே! சுவையே!
கட்டி விளையுமொரு கழையே! அளியேம்-உளமூறும்
கட்செவி யணியிறை யெனவே முதிரா
முத்தமிழ் துறைவளர் கடலே! மலையே!
கற்பக மெனவிழை வனவே தருவாய்-பெருதேவி!
உற்றன விடரவை களையா மறவா
திச் சிறுவர் கடமை யயலார் பழியா
துச்சமி கவடைய வருள்வாய் கலையே-இணையாக
ஒத்தவெ னுமொழிகள் விழவே யுலவா
தித்தரை யதுதனில் நிலையா வளர்வாய்!
ஒப்பிலை யெனநனி புகழ்வார் மொழிநூல்-உரைகாரர்
சுற்றிய வுடைதிரு மணிமே கலையே
முச்சியி லணிவது சிதறா மணியே
தொக்கபல் சிறுவர்கள் பெறவே தருவாய்-கலைமானே!
தொத்தும லர்களணி பொழில்சூழ் வளமார்
தெற்குறு மலைபெறு குறுமா முனிவோன்
சொற்கு மிகமகிழு மொழியா மணமார்- சிறுகாலே!
தெற்றன மறைவளர் குறளா ரமையே!
எட்டலர் தொகைவிரி மலரார் கொடியே!
செப்புற நிலமக டனிமா மகளே -தமிழாயே!
செப்ப முடையவர்கள் உளமே எனவே
இக்கழகமு முயர் நலமே யுறவே
திக்குள வரைஇறை என வாழியவே-இனிதாயே!
மு. வே. மா. வீ. உலகவூழியன்,
வாடாக்கரங்தை
[ஆண்டு - 1926 தை/ஜனவரி]
(பக்கம் 369)
______________________________ ______________
தமிழ்ப் பொழில்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
துணர்: 1 ❖ குரோதன - தை ❖ மலர்: 10
______________________________ ______________
91
ஆண்டுகளுக்கு முன்னர் [ஆண்டு - 1926, தை/ஜனவரி] மு. வே. மா. வீ.
உலகவூழியன் அவர்கள் எழுதி தமிழ்ப் பொழிலில் வெளியான தமிழ்த்தாய் வாழ்த்து.
விளக்க உரை எழுதவும்
ReplyDelete